கோரிக்கைகளை வலியுறுத்தி டி.என்.சி.எஸ்.சி சுமை தூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்

0 225
Stalin trichy visit

திருச்சி, நவ.26  முசிறி டி என் சி எஸ் சி பணியாற்றும் சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தினர் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்,

திருச்சி மாவட்டம், முசிறி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வட்டார செயல்முறை கிடங்கில் பணியாற்றும் டிஎன்சிஎஸ்சி சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தினர் 20 பேர் நுகர் பொருட்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் நிரந்தர சுமை தூக்கும் பணியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர், இவர்கள் 20 பேர் இன்று முதல்
சங்க அங்கீகார தேர்தலை உடனே நடத்த வேண்டும், வருகை பதிவேட்டில் பெயர் இல்லாமல் பணி செய்யும் தொழிலாளர்களின் பெயர்களை உடனே வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்க வேண்டும், 2022, 10 ஆண்டுகள் பணி முடித்த தொழிலாளர்களுக்கு பச்சை அட்டையை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வைத்து பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றும்
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேற்றாத காரணத்தால் இன்று முதல் மூன்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் போராட்டத்தால் பள்ளிகளிலுள்ள சத்துணவு மையம், நியாய விலை கடை, பள்ளி, கல்லூரி விடுதிகள் ஆகியவைகளுக்கு கொண்டு செல்லும் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லாமல் தடைபட்டுள்ளதால் பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகள் மற்றும் ஏராளமானவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது,

இந்நிலையில் முசிறி காவல் ஆய்வாளர் செல்லத்துரை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு அவர்கள் கோரிக்கை நிறைவேற்றினால் மட்டுமே வாபஸ் பெறுவோம் என கூறியதை தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.