நிதி நிறுவன ஊழியர் தற்கொலை : உறவினர்கள் போராட்டம்
திருச்சி, செப்.17 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியை சேர்ந்தவர் விக் னேஷ்வர் (வயது 35). மணப்பாறையில் உள்ள நிதி நிறுவனத் தில் வேலைபார்த்த அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து விலகி கொண்டார். இதற்கிடையில் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்களை விக்னேஷ்வரிடம் பணம் பெற்றுக் கொள்ள நிதி நிறுவனம் நடத்தி வந்தவர்கள் கூறியதால் பலர் விக்னேஷ்வர் வீட்டிற்கு சென்று பணம் கேட்டதால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் நீதிகேட்டு விக்னேஷ்வரின் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக நேற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஒரு வழக்கில் நிதி நிறுவன பங்குதாரர்களான விஜயன், சந்துரு ஆகியோரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து விக்னேஷ்வர் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அவ ரது உடலை வாங்கி சென்றனர்.