“டிட்வா” புயல் திருச்சி மாவட்டத்துக்கு “ஆரஞ்சு அலெர்ட்”

0 208
Stalin trichy visit

திருச்சி, நவ.28 திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “டிட்வா” புயல் காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், காவிரி கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. புயல் மழை காலங்களின் போது பொதுமக்கள் தக்க வைக்க ஏதுவாக 154 பாதுகாப்பான மையங்கள் தயார் நிலையில் உள்ளன. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகர் 24 மணி நேரமும் அவசர கட்டுப்பாடடு அறை செயல்பாட்டில் உள்ளது.

இக்கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கோ அல்லது 0431 2418995 என்ற எண்ணிற்கோ புயல், மழை, வெள்ளம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். மேலும் வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் கட்டுப்பாடடு அறைக்கோ அல்லது வட்டாட்சியர்களின் அலைபேசி எண்ணிற்கோ பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
அதன்படி திருச்சி கிழக்கு 0431 2711602, 9445461808, திருச்சி மேற்கு 0431 241040, 9445000602, திருவெறும்பூர் 0431 2555542, 7825873784, ஸ்ரீரங்கம் 0431 2230871, 9445000603, மணப்பாறை 04332 260576, 9445000604, மருங்காபுரி 04332 299381, 9445461805, லால்குடி 0431 2541233, 9445000605, மண்ணச்சநல்லூர் 0431 2561791, 9445000606, முசிறி 04326 260226, 9445000607, துறையூர் 04327 222393, 9445000609, தொட்டியம் 04326 254409, 9445000608 ஆகிய எண்ணிகளில் தெரிவிக்கலாம்.

புயல், மழையின் போது ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் குழந்தைகள் செல்லாத வண்ணம் கவனமாக இருக்குமாறு பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது. வானிலை தொடர்பான தகவல்களை “TN-Alert APP” மற்றும்  “SACHET APP”ஆகியவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.