காவிரி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த மூன்று வாகனங்கள் பறிமுதல்

0 183
Stalin trichy visit

திருச்சி, நவ.29  முசிறி அருகே காவிரி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த மூன்று வாகனங்கள் பறிமுதல் – போலீசார் தீவிர விசாரணை

திருச்சி மாவட்டம், முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதி காவிரி ஆற்றில் இருந்து மணல் சட்ட விரோதமாக இரவு நேரங்களில் கடத்தப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று இரவு காட்டுப்புத்தூர் – தொட்டியம் செல்லும் சாலையில் காரைக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஜேசிபி, டிப்பர் லாரிகள், மாட்டு வண்டி ஆகியவற்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரைக்காடு பகுதி காவேரி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக அரசு அனுமதி இன்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு டிப்பர் லாரிகள், ஜேசிபி வாகனம், ஒரு மாட்டு வண்டி உள்ளிட்டவைகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக காட்டுப்புத்தூர் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து 4 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.