மொபைல் கடைக்காரர் ரூ.36 லட்சம் ஜி.எஸ்.டி. செலுத்தும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் : பாதிக்கப்பட்டவர் அதிர்ச்சி

0 213
Stalin trichy visit

திருச்சி, நவ.28  ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு திருச்சி வருமான வரி துறையினர் நோட்டீஸ் – தனக்கு தொடர்பில்லை என பாதிக்கப்பட்டவர் அதிர்ச்சி பேட்டி

பாதிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் சபிமுகமது. இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

நான் ஆற்காட்டில் கைக்கடிகாரம் மற்றும் மொபைல் கடை நடத்தி வருகிறேன். எனது நிறுவனத்திற்கு வருடம் தோறும் உரிய வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி தொகை செலுத்தி வருகிறேன்.

இந்நிலையில் எனது ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக தெரியவந்தது. வங்கியை தொடர்பு கொண்ட போது ரூபாய் 36 லட்சம் ஜிஎஸ்டி கட்டும்படி தெரிவிக்கப்பட்டு இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் சபிமுகமது என்ற எனது பெயரில் இரும்பு விற்பனை நிறுவனம் துவக்கப்பட்டு அதில் ரூபாய் 36லட்சம் GST செலுத்துவதற்கான வருமானத்துறையினர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் அந்த நிறுவனத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பில் என திருச்சி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தும் வருமான வரிதுறையினர் கட்டாயமாக பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துவிட்டனர்.

இது தொடர்பாக ஏற்கனவே சைபர் கிரைம் மற்றும் ஜிஎஸ்டி அலுவலகத்தில் புகார் அனுப்பி உள்ளேன்.

இதன் காரணமாக எனது வங்கி கணக்கு தொடர்ந்து இயக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். எனவே, உடனடியாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.