தந்தை பெரியார் கல்லூரியில் பாரம்பரிய கட்டிடங்களை புனரமைக்க ரூ.62 கோடி ஒதுக்கீடு : முதலமைச்சருக்கு சிவா எம்.பி. நன்றி

0 241
Stalin trichy visit

திருச்சி, நவ.29  சில நிகழ்வுகளே காலப்போக்கில் நினைவுகளாக மாறுகின்றன. நிகழ்வுகள் நினைவாக வேண்டுமெனில் மாணவர்கள் அதில் பங்கேற்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப ஈடுபாட்டின் காரணமாக தற்போதைய மாணவர்களில் விழா ஆர்வம் குறைந்துள்ளது  எம்.பி. சிவா பேட்டி

திருச்சியில் பெரியார் நிலம் கொடுத்து ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கிய கல்லூரி தந்தை பெரியார் கல்லூரி. இந்த கல்லூரியில் தற்பொழுது 5000 பேர் கல்வி பயில்கிறார்கள்.

இந்தக் கல்லூரியில் பெரியார் வழக்கு தொடர்ச்சி உருவாக்கிய கட்டிடம் ஸ்ரீலங்கா கட்டிடம் மற்றும் டொக்காயா கட்டிடம். அந்த இரண்டு கட்டிடங்களும் உரிய பராமரிப்பின்றி இருந்தது அதனை புனரமைப்பு செய்வதற்கு நிதி அமைச்சரிடம் பேசினேன் தற்பொழுது தமிழக அரசு அந்த கட்டிடங்களை புனரமைக்க ரூ. 6.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கு முதலமைச்சர் துணை முதலமைச்சர் நிதி அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அந்த கட்டிடங்கள் புனரமைக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ஐந்து சிறந்த கல்லூரிகளில் தந்தை பெரியார் கல்லூரியும் ஒன்றாக விளங்குகிறது. விரைவில் அந்தக் கட்டிடம் பழமை மாறாமல் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.

உங்களுக்கு தாஜ்மஹாலா என்ற கேள்விக்கு பதில் அளித்த எம் பி சிவா.. உயிரோடு இருக்கும் உணர்வுகளுக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் என நினைக்கிறேன் என பதிலளித்தார் மேலும்

இப்போது உள்ள மாணவ மாணவிகள் விழாக்களில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று விழா மேடையில் எடுத்துரைத்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த எம் பி சிவா..

சில நிகழ்வுகள் தான் கால ஓட்டத்தில் நினைவுகளாக பதியும், நிகழ்வுகள் இருக்க வேண்டும் என்றால் அதில் பங்கெடுக்க வேண்டும் நம்முடன் பழகும் மனிதர்களால் தான் வாழ்க்கையில் நினைவுகள் உள்ளன, முன்னாள் மாணவர்களால் விழாக்களை மறக்க முடியாது இங்கு இந்த கல்லூரிக்கு பெரியார் ,கலைஞர் , வீரமணி, கவிஞர் கண்ணதாசன் ,ஜெயகாந்தன் போன்ற மூத்த தலைவர்கள் இங்கு வருகை தந்துள்ளனர் அந்த நினைவுகள் எல்லாம் எங்களால் மறக்க முடியாத நாட்களாக உள்ளது.

இதுபோன்று கல்லூரி மாணவ மாணவிகள் விழாக்களின் கலந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் மனதில் பதியும், ஆனால் பெரும்பாலோர் வளர்ந்து இருக்கக்கூடிய தகவல் தொழில்நுட்ப ஈடுபாட்டின் காரணமாக  பெரும்பாலோர் ஆர்வம் காட்டுவதில்லை அதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம் மாணவ மாணவிகள் மீது குறைகள் கூற வழிவகை இல்லை விழாக்களை காண ஆர்வம் காட்ட அந்த நிலையை வளர்க்க வேண்டும் என்பதற்காக வேண்டுகோள் விடுத்துள்ளேன் விழாக்கள் என்றால் மாணவ மாணவிகள் பங்கேற்றுக் கொள்ளுங்கள் என்று எடுத்துரைத்தேன், முன்னாள் மாணவர்கள் சங்கம் வலிமையுடன் இன்றும் உள்ளது என்றால் நாங்கள் ஆர்வம் காட்டியதால் தான் என தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.