பா.ஜ.க.வுக்கு “ஸ்லீப்பர் செல்” யாரும் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி

0 140
Stalin trichy visit

திருச்சி, நவ.29 திருச்சி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு

கும்பகோணத்தில் கட்சி நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது கூறுகையில்..

செங்கோட்டையன் அவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு பின்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார் பாஜகவில் இருந்து போயிருந்தால் நான் கருத்து கூறுவேன் ஆனால் அதிமுகவிலிருந்து விலகி வேறொரு கட்சியில் இணைந்து இருக்கிறார் அதைப்பற்றி நான் கருத்து கூற முடியாது ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த கட்சியில் இருந்து எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இணையலாம் அதுவும் தேர்தல் நேரங்களில் இது போன்ற மாற்றங்கள் எல்லா காலங்களிலும் நடைபெறும் திமுக அரசு வெறுப்பை சம்பாதித்துள்ளது குடும்ப ஆட்சி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் விலைவாசி உயர்ந்துள்ளது மின்சார கட்டணம் இருந்துள்ளது எல்லாவற்றையும் பார்த்து மக்கள் வெறுப்படைந்துள்ளனர் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

யார் முதலமைச்சராக வைக்க வேண்டும் என மக்கள் தான் முடிவு செய்யட்டும் ஒவ்வொரு தனிப்பட்ட நபர் கருத்து சொல்ல முடியாது. ஜோசியம் தான் சொல்ல முடியும் குடுகுடுப்புகாரன் போல ஜோசியம் சொல்லலாம் நடைமுறையில் உள்ளது.. வருகின்ற 2026 தேர்தலில் அது தெரிவிக்கப்படும் ஏற்கனவே கட்சி நடத்தி கொண்டிருந்தவர் கமலஹாசன் அவர் கட்சியை கலைத்து விட்டாரா அல்லது திமுகவில் சேர்த்துவிட்டாரா என தெரியவில்லை..
இப்போது உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் எனக் கூறியுள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்து அவரை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக அப்படி கூறியுள்ளார்..

தேசிய ஜனதா கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் எங்களுக்கு ஸ்லீப்பர் செல் யாரும் இல்லை நாங்கள் நேரடியாக களத்தில் இருப்பவர்கள் எங்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது கூட்டணியில் இருக்கிறது. தேர்தலுக்கு காலம் இருக்கிறது யார் யாரெல்லாம் எந்த கட்சியில் இணைவார்கள் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்..

Leave A Reply

Your email address will not be published.