பால்பண்ணை – துவாக்குடி அணுகுச்சாலை : மாவட்ட ஆட்சியருடன் திருச்சி எம்.பி ஆலோசனை

0 160
Stalin trichy visit

திருச்சி, நவ.29 திருச்சி எம்.பி துரைவைகோ தெரிவித்திருப்பதாவது,  திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணனை அவரது அலுவலகத்தில்  நேற்று (நவ.28)  சந்தித்தேன். அப்போது, பால்பண்ணை – துவாக்குடி அணுகுசாலை (service road) கூட்டமைப்பினரும், உடனிருந்தனர். அப்போது, இந்த அணுகு சாலை அமைப்பது தொடர்பான தற்போதைய  குறித்து விவாதிக்கப்பட்டது. அதுபோல, காந்தி மார்க்கெட்ட காய்கரி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.

புதிதாக அமையவுள்ள பஞ்சப்பூர் காய்கறி பெரியங்காடியில் அவர்களுக்கு தோதான அளவுகளில் கடைகளை அமைக்க வேண்டுமென்று எனது பரிந்துரையோடு, மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டனர்.

இந்த சந்திப்பில், அணுகு சாலை கூட்டமைப்பினரும், காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் சுமூகமான மற்றும் நம்பிக்கையோடு விடைபெற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, நாம் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் வைத்திருந்த சில கோரிக்கைகளை நினைவூட்டி, அதன் இன்றைய நிலவரம் பற்றியும் விவாதித்தோம்.

அதில், முதலாவதாக,  மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் கண்ணுடையான் பட்டியில் கால்நடை மருத்துவமனை அமைக்கப் பரிந்துரை வழங்குதல் தொடர்பாக ஏற்கனவே கொடுத்திருந்த கடிதத்தை நினைவுப்படுத்தினேன்.

இரண்டாவதாக, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (press club) பட்டா தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை கொடுக்கப்பட்ட எனது கடிதத்தை நினைவூட்டி, அதுகுறித்தும் விவாதித்தோம்.

மூன்றாவதாக, மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டு வாரிய மையும் அமைப்பது தொடர்பாகவும், அந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னை இணைத்து செயல்பட கேட்டுக்கொண்ட கடிதத்தை நினைவூட்டி அதன் அவசியத்தை எடுத்துரைத்தேன்.

நான்காவதாக, மணிகண்டம் ஒன்றியம், சுபதம் அவென்யூவில் மலைநீர் வடிகால் அமைப்பது தொடர்பான கோரிக்கையை நினைவு படுத்தினேன்.

திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பதற்கு உரிய நிலத்தை மாவாட்ட நிர்வாகம் ஒதிக்கீடு செய்துதருவது தொடர்பாகவும் கலந்துரையாடினேன்.

திருச்சில் இயங்கும் ESIC மருத்துவமனை உள்ள நிலத்தின் குத்தகை காலத்தை நீட்டிப்பு செய்து ESIC நிர்வாகத்திடமே இருப்பதற்கு உரிய பணிகளை விரைவாக நிறைவேற்றித்தரவும் கேட்டுக்கொண்டேன்.

அனைத்தும் முக்கியத்துவத்தையும் உளப்பூர்வமாக உணர்ந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் எனது அனைத்து கோரிக்கைகளுக்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஒப்புதல் அளித்தார் என்று துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.