ஏரி, குளங்கள், ஆறுகளிலுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றக் கோரிக்கை
திருச்சி, டிச.4 திருச்சி மாவட்டத்திலுள்ள குளங்கள், ஆறு, ஏரிகளிலுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றக்கோரி.
ஆகாயத்தாமரையினால், நீர் ஆவியாவதைத் துரிதப்படுத்துவது மற்றும் நீர்நிலைகளில் உள்ள உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறது. நீர் ஒட்டத்தைத் தடுப்பது போன்ற பல காரணத்தினார். நீர்நிலைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆனால் திருச்சி மாவட்டத்தில் பல இடங்களில் இதற்கான பணிகள் நடைப்பெறவில்லை. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் பெரிய குளங்களில் ஒன்றான மாவடிக்குளம், உய்யக்கொண்டான் ஆறு, கொட்டப்பட்டு குளம் போன்ற பல குளங்கள், ஏரிகள் உள்ளது. எனவே நீர்களை பாதுக்காக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு மற்றும் பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளார் கே.சி.நீலமேகம் தெரிவித்துள்ளார்.