இரண்டு மாதம் சம்பளம் பாக்கி : காவல்நிலையத்தை முற்றுகையிட முயன்ற வடமாநில தொழிலாளர்கள்

0 129
Stalin trichy visit

திருச்சி, டிச.4  இரும்பு கம்பி தயார் செய்யும் தனியார் ஒப்பந்த தொழிற்சாலையில் பணிபுரிய வந்த புலம் பெயர் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு இரண்டு மாதம் சம்பளம் வழங்காததால் துவாக்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முற்பட்டதால் பெரும் பரபரப்பு

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் உள்ள சிட்கோ தொழில் பேட்டையில் 35 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஹரியானா மாநிலம் ஹச் .எஸ். சிங் என்பவரது தொழிற்சாலை இயங்கி வருகிறது இந்நிலையில் தனது வயது முதிர்ச்சியின் காரணமாக சென்னையை தலைமை இடமாகக் கொண்டு திருச்சியில் இயங்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இரும்பு கம்பி தயார் செய்யும் வேலைக்கு அந்த கம்பெனியை கடந்த 01.08.2025 அன்று முதல் ஒப்பந்த அடிப்படையில் 23 மாத கால அடிப்படையில் ஒப்பந்தம் எடுத்து வட மாநிலம் பிகார் மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுமார் 25 தொழிலாளர்கள் கடந்த நான்கு மாதமாக வேலை பார்த்து வந்துள்ளனர்

இந்நிலையில் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் தொழிற்சாலையின் உரிமையாளருக்கும் ஒப்பந்தம் எடுத்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது

இதனால் வேலை செய்து வந்த வட மாநில ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனவும் மேலும் அந்த சம்பளத் தொகையை வழங்க கோரி வட மாநிலத்தை சேர்ந்த 25 ஊழியர்கள் துவாக்குடி காவல் நிலையத்தில் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்

மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில் இரண்டு மாத காலமாக எங்கள் குடும்பத்திற்கு பணம் அனுப்பாமல் அவர்கள் சிரமப்பட்டு வருவதாகவும் அன்றாடம் சாப்பாட்டிற்கு சிரமப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து உரிமையாளர்களிடம் கேட்டால் தகுந்த பதில் அளிக்கவில்லை என்றும் மேலும் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு எங்களது சம்பளத் தொகையை பெற்று தர வேண்டும் என காவல்துறையிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தனர்

மேலும் இதற்கு காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இல்லை என்றால் நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.