தொட்டியம் மதுர காளியம்மன் கோவிலில் சொக்கப்பனை தீப திருவிழா

0 165
Stalin trichy visit

திருச்சி, டிச.6  தொட்டியம் மதுர காளியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றப்பட்டது

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருள்மிகு ஸ்ரீ மதுரை காளியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டுநேற்று  சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ மதுரை காளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மகா தீபாராதனையும் நடந்தது. பிறகு இரவு சொக்கப்பனை ஏற்று நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மதுரகாளியம்மன் கோயில் நிர்வாகிகள் ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோன்று தொட்டியம் அனலாடீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பௌர்ணமி பூஜை நடந்தது மேலும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு அனலாடீஸ்வரர் திரிபுரசுந்தரி தாயாருக்கும் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும் மகா தீபாராதனையும் நடந்தது.

பிறகு இரவு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு சுவாமி திருவீதி உலா நடந்தது. விழாவில் யாராலமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.