சாலையோர புளியமரம் விழுந்ததில் காய்கனி வியாபாரம் செய்த பெண் பலி
திருச்சி,டிச.6 தொட்டியம் அரங்கூரில் காய்கனி வியாபாரி நிர்மலா பெண் மீது சாலையோரம் புளியமரம் விழுந்ததில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் வடக்கு அரங்கூரை சேர்ந்தவர் மகாமுனி கூலித்தொழிலாளி இவரது மனைவி நிர்மலா காய்கறி வியாபாரம் பார்த்து வருகிறார்
வழக்கம்போல் வடக்கு அறங்கூர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே காய்கறி வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு சாப்பிடுவதற்காக சென்றபோது சாலையோரம் இருந்த புளியமரம் அடியோடு சாய்ந்ததில் அருகில் இருந்த மின் கம்பம் முறிந்து நிர்மலாவின் மீது விழுந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அக்கம் பக்கத்தினர் நிர்மலாவை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அப்போது தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நிர்மலா உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து நிர்மலாவின் கணவர் மகாமுனி தொட்டியம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நிர்மலாவின் உடலை பிரேத ஸ்பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.