திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயிலில் துணை ஜனாதிபதி மனைவி சுவாமி தரிசனம்

0 125
Stalin trichy visit

திருச்சி,டிச.6  முசிறி தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயிலில் துணை ஜனாதிபதி மனைவி சுவாமி தரிசனம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள திருஈங்கோய்மலை ஸ்ரீ மரகதாசலேசுவரர் கோயிலில் இந்திய துணை ஜனாதிபதி மனைவி சுவாமி தரிசனம் செய்தார்.

சிவாலயங்களில் மூர்த்தி தீர்த்தம் தளம் என்னும் மூன்று பெருமைகளுடன் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்கள் ஏராளமாக உள்ளன,

அவற்றில் திருச்சி மாவட்டம் முசிறி அருகே காவிரியின் தென்கரைப் பகுதியில் உள்ள குளித்தலை கடம்பர் கோயில், அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோயில், காவிரியின் வடகரைப் பகுதியில் உள்ள திருஈங்கோய்மலை மரகதாசலேஸ்சுவரர் ஆகிய மூன்று தலங்களையும் கார்த்திகை மாதம் ஒரே நாளில் சென்று வழிபட்டால் முக்தி பலனும், காசிக்குச் சென்ற பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம், இதன டிப்படையில் பக்தர்கள் காலையில் குளித்தலை கடம்பன் கோயிலிலும், மதியம் அய்யர் மலை இரத்தினகிரீஸ்வரர் கோயிலிலும், மாலை திருஈங்கோய்மலை மரகதசலேசுவரர் கோயிலிலும் கார்த்திகை மாதத்தில் மூன்று தளங்களையும் ஒரே நாளில் குறிப்பாக சோமாவர நாளான திங்கள்கிழமை அன்று சென்று பக்தர்கள் தற்போது வரை வழிபட்டு வருகின்றனர்/

இந்த மூன்று திருத்தலங்களுக்கும் இந்திய துனை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் மனைவி சுமதி நேரில் சென்று வழிபட்டு திருஈங்கோய்மலையில் மலை மீது உள்ள மரகதசலேசுவரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார்.

அப்போது அவருக்கு சிறப்பு பாதுகாப்பு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.