தெற்கு மாவட்ட தி.மு.க. மாநகர விவசாய அணி சார்பில் விவசாயிகளுக்கு பூச்சி மருந்து – உரம் வழங்கல்

0 96
Stalin trichy visit

திருச்சி, டிச.6 தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 48 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு டி.சி.எம்48 என்ற தலைப்பில் திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது .

அதன் தொடர்ச்சியாக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில், திருச்சி தெற்கு மாவட்ட மாநகர விவசாய அணி சார்பாக கல்லுக்குழி பகுதியில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில் விவசாயிகளுக்கு பூச்சி மருந்து மற்றும் உரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து வரவேற்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் மாமன்ற உறுப்பினர் ரமேஷ், மாநகர அமைப்பாளர் குறிஞ்சி மன்னன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநகர செயலாளர் மு மதிவாணன், மாநில அணி நிர்வாகி மாமன்ற உறுப்பினர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்துகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் லீலாவேலு, பகுதி செயலாளர்கள் மணிவேல், விஜயகுமார், வர்த்தக அணி அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன், மாமன்ற உறுப்பினர் கீதா, வட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மாநகர விவசாய அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர், நிறைவாக மாநகர தலைவர் குமார் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.