அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்

0 111
Stalin trichy visit

திருச்சி, டிச.6 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கம் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி சுயதொழில் மற்றம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதைத் தொடர்ந்து திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 16 அரசு துறைகளின சார்பில் 2058 பயனாளிகளுக்கு ரூ.37 கோடியே 75 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்ழபகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், தியாகராஜன், பழனியாண்டி, கதிரவன், மாவட்ட வருவாய அலுவலர் பாலாஜி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுரேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரஞ்சித், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீராம், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.