ஹவுரா- திருச்சி ரயிலில் கடத்தி வரப்பட்ட 36 கிலோ கஞ்சா பறிமுதல்

0 112
Stalin trichy visit

திருச்சி, டிச.6  திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக திருச்சி ரயில் நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை

தெற்கு ரயில்வே IRPFS , முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர்  K .அருள் ஜோதி,  உத்தரவின் பேரில், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் பிரசாந்த் யாதவ் , IRPFS மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில், திருச்சி RPF ஆய்வாளர் ரமேஷ்,திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை  தலைமையில் , இன்று(06.12.2026) திருச்சி RPF வெடிகுண்டு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்  சரவணன் (S.SARAVANAN,SIPF/BDS/TPJ), D.செல்வராஜா, ASIPF/CPDS/RPF/TPJ, A.இளையராஜா, HC/BDS/TPJ S.ஜெயவேல், HC/CPDS/TPJ, மற்றும் எம்.பிரசாந்த், Con/GRP/TPJ மற்றும் NIB/Trichy குழு, ஆகியோருடன், திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் சட்டவிரோதமான போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேற்படி நடவடிக்கையின் போது திருச்சி பிளாட்ஃபார்ம் எண்.08ல் வந்து அடைந்த Tr.No.*.12663 ஹவுரா–திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில், நடத்திய சோதனையின் போது,  சந்தேகத்திற்கிடமான முறையில் உரிமை கோரப்படாத டிராவல் பேக்  கிடந்தது . அதை சோதனை செய்த போது, 36 கிலோ  ரூ.18,00000/- மதிப்புள்ள கஞ்சா கடத்தல் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் விசாரணை செய்த போது அதனை உரிமைக்கோர எவரும் முன் வரவில்லை.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, தேவையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் தொடர்ந்த விரிவான விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.