சிங்கப்பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை
திருச்சி, டிச.8 திருச்சி ஓடத்துறை காவிரி கரையில் எழுந்தருளியுள்ள ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது.
உலகஷேமத்திற்காக பட்டாச்சாரியார்களால் நரசிங்கபெருமாள் மூலமந்திரம் இடைவிடாது பாராயணம் செய்யப்பட்டு, ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. தங்க கவசம் அணிந்து சேவைசாதித்த சிங்கப்பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்