முசிறி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை – இருசக்கர வாகனம் திருட்டு

0 145
Stalin trichy visit

திருச்சி, டிச.8  முசிறி அருகே ஏழூர்பட்டி, வடக்கு தெருவில் கோபி என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து 11 சவரன் நகை திருட்டு, அதே பகுதியில் ரவி என்பவர் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனமும் தொடர் திருட்டு,

கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் கொண்டு முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் ஏழூர்பட்டி, வடக்கு ரெட்டியார் தெருவில் வசிக்கும் கோபி அப்பகுதியில் மெடிக்கல் கடை வைத்து தொழில் செய்து வருகிறார், இவர் தனது வீட்டு அருகே புதிய வீடு கட்டி குடியிருக்கும் நிலையில் அருகில் உள்ள இவரது வீட்டை பூட்டி வைத்து இருந்து வருகின்றனர்,

நேற்று இரவு புதிய வீட்டில் குடும்பத்துடன் இருந்த பொழுது பழைய வீட்டின் பூட்டை உடைத்து உடைத்து பீரோவில் இருந்த வலைகள், கல் கல் வைத்த தோடு, அரை, கால் பவுன் 2 தங்கத்தோடு, அரை பவுன் இரு மோதிரம் உள்ளிட்ட 11 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்,

தொடர்ந்து ஏலூர்பட்டி, வடக்கு தெருவில் வசிக்கும் ரவி என்பவர் வீட்டின் முன்பாக அவரது மைத்துனர் தொட்டியம், கொசவம்பட்டியைச் சேர்ந்த தனியார் பேருந்து டிரைவர் வடிவேல், தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணிக்கு சென்று விட்டு காலை வந்து வாகனத்தை பார்த்த பொழுது இரு சக்கர வாகனம் காணவில்லை என காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார்,

தகவல் அறிந்த முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் நிகழ்விடத்தில் வந்து திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டார், தொடர்ந்து கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

ஒரே இரவில் 11 சவரன் நகையும், இருசக்கர வாகனமும் இரு வேறு இடங்களில் காணாமல் போனது அப்பகுதி மக்களிடையே தொடர் திருட்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது…

காட்டுப்புத்தூர் போலீசார் தனிப்படை அமைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.