சென்னை போராட்டத்திற்கு புறப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை சங்கப்பணியாளர்கள் தடுத்து நிறுத்தம்

0 139
Stalin trichy visit

திருச்சி, டிச.9  மணப்பாறையில் இருந்து சென்னைக்கு போராட்டத்திற்கு புறப்பட்டவர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

சென்னை பனகல் மாளிகை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் புறப்பட்டு செல்கின்றனர். அதன்படி மணப்பாறையில் இருந்து 3 பேருந்து மூலம் சென்னைக்கு சுமார் 150 க்கும் மேற்பட்டோர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டத்திற்கு புறப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் போலீசார் யாரும் வெளியில் செல்ல அனுமதி மறுத்து கதவை மூடி விட்டனர்.

கடந்த 2017 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜிஓ படி தங்களுக்கு அடிப்படை ஊதியம் வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்ததோடு அறவழியில் நடைபெறும் காத்திருப்பு போராட்டத்திற்கு கூட செல்ல விடாமல் தடுத்து நிறுத்துவது ஏற்புடையாது அல்ல என்றும், அரசு உடனடியாக இந்த விசயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர். சென்னை செல்வோர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமர்ந்துள்ள நிலையில் அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டுள்ளது. இரவில் சென்னை செல்ல இருந்த ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.