விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம் குறித்து நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்

0 124
Stalin trichy visit

திருச்சி, ஜன.3  விவசாயிகளுக்கு கடன் வசதி மற்றும் பயிர் காப்பீடு திட்டம் பற்றி நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், ஆதிக்குடி கிராமத்தில் இன்று கடன் வசதி மற்றும் பயிர் காப்பீடு திட்டம் பற்றி நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் தெளிவாக எடுத்து கூறினார்கள்.

கிசான் கடன் அட்டை மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் தொடர்பான நன்மைகள், தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விளக்கங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. கிசான் கடன் அட்டை என்பது குறைந்த வட்டியில் பயிர் செலவுகளுக்கான கடன் பெற உதவுவதோடு அவசர சூழ்நிலைகளில் நிதி ஆதரவு வழங்குவதற்கு பயன்படுகிறது.

அதேபோல் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் இயற்கை பேரிடர் வெள்ளம், வறட்சி, புயல் மற்றும் பூச்சி தாக்குதலால் ஏற்படும் விளைச்சல் இழப்புக்கு நிவாரணம் வழங்குவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

இதனை நாளந்தா வேளாண்மை கல்லூரியின் இறுதி ஆண்டு இளங்கலை மாணவர்கள் ச.வினோத், ஜா.சாம் குமார், ஜெ.சுரேந்தர், ச.சந்தோஷ், பு.சக்தி, க.ராஜேஷ் மற்றும் கோ.சதீஷ் ஆகியோர் நாளந்தா வேளாண்மை கல்லூரியின் தாளாளர் அல்லி இங்கர்சால், முதல்வர் முனைவர் ஜெ.வெங்கடா பிரபு, முனைவர் பா.குணா இணைப் பேராசிரியர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர், ப. நந்தகுமார் முதுநிலை உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ம.சுரேஷ் உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி செய்து காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.