குதிரை பந்தய போட்டியில் காயமடைந்தவருக்கு உதவிய அமைச்சர் அன்பில் மகேஸ்

0 120
Stalin trichy visit

திருச்சி, ஜன.5  குதிரை வண்டி மோதி கீழே விழுந்து காயமடைந்த திமுக பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் திருவெறும்பூர் ஒன்றிய துணைத் தலைவருமான சண்முகத்தினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கை தூக்கி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் 100 அடி சாலையில், தமிழ்நாடு மாநில குதிரை உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் நலச்சங்கத்தின் சார்பில் முதலாம் ஆண்டு குதிரை பந்தயம் நடந்தது.

இந்த போட்டியினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த போட்டியில் புது குதிரை ஒன்று மற்றும் இரண்டு பிரிவுகளிலும் அளவு குதிரை 43 மற்றும் 45 ஆகிய பிரிவுகளிலும், நடு குதிரை மற்றும் பெரிய குதிரை என ஆறு பிரிவுகளில் குதிரை பந்தயம் நடைபெற்றது.

புதுக்குதிரை ஒன்றுக்கு மற்றும் இரண்டிற்கு முதல் பரிசு ரூ20 ஆயிரம் இரண்டாவது பரிசு ரூ15 ஆயிரம், மூன்றாவது பதிவு ரூ12ஆயிரம் நான்காவது பதிவு ரூ10 ஆயிரம்,

43 அளவு குதிரை 7மைல் தூரம் முதல் பரிசு ரூ25ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ 20 ஆயிரம்,

மூன்றாவது பரிசு ரூ15 ஆயிரம், நாலாவது பரிசு ரூ 12 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

45 அளவு குதிரை 8மைல் தூரம் முதல் பரிசு ரூ30 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ25 ஆயிரம் மூன்றாவது பரிசு ரூ20 ஆயிரம்நான்காவது பரிசு ரூ12 ஆயிரம் வழங்கப்பட்டது.

நடு குதிரை 9 மைல் தூரம் போட்டியில் முதல் பரிசு ரூ40 ஆயிரம் இரண்டாவது பரிசு ரூ30 ஆயிரம் மூன்றாவது பதிவு ரூ20ஆயிரம், நான்காவது பரிசு ரூ13 ஆயிரம் வழங்கப்பட்டது.

பெரிய குதிரை 10 மைல் தூரம் போட்டியில் முதல் பரிசு ரூ50 ஆயிரம் இரண்டாவது பரிசு ரூ 40 ஆயிரம் மூன்றாவது பரிசு ரூ30 ஆயிரம் நான்காவது பரிசு ரூ15 ஆயிரம் வழங்கப்பட்டது.

போட்டியில் சீறிப்பாய்ந்து வெற்றி பெற்ற குதிரைகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோப்பையும் ரொக்க பரிசினையும் வழங்கினார்.
போட்டியினை துவக்கி வைத்த போது குதிரை முட்டியதில் திமுக பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் ஒன்றிய துணைத் தலைவருமான சண்முகம் கீழே விழுந்த காயம் அடைந்தார். அவரை உடனடியாக அங்கிருந்து அவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.