பிளான்டிங்ஸ் செயலி குறித்து நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் செய்முறை விளக்கம்
திருச்சி, ஜன.5 நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பிளான்டிங்ஸ் செயலி குறித்து செய்முறை விளக்கம்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், ஆதிகுடி கிராமத்தில் கரும்பு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு நாளந்தா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பிளான்டிங்ஸ் செயலி பற்றியும் அதன் பயன் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தனர். இந்த செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது, அதில் எவ்வாறு கணக்கை ஏற்படுத்துவது, பயிர் மேலாண்மையை இந்த செயலி மூலம் எப்படி செய்வது என்பதை குறித்தும் செய்முறை விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் 20% லாபத்தை அதிகரித்து விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும் என்பதனை பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.
இதனை நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ச.வினோத், ஜா.சாம் குமார், ஜெ.சுரேந்தர், ச.சந்தோஷ், பு.சக்தி, க.ராஜேஷ் மற்றும் கோ.சதீஷ் ஆகியோர் நாளந்த வேளாண்மைக் கல்லூரியின் தாளாளர் அல்லி இங்கர்சால், முதல்வர் முனைவர். ஜெ.வெங்கடா பிரபு, முனைவர். பா.குணா இணைப் பேராசிரியர், துறைத் தலைவர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர், .ப. நந்தகுமார் முதுநிலை உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர், ம.சுரேஷ் உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி செய்து காட்டினர்.