மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி வருகை

0 101
Stalin trichy visit

திருச்சி, ஜன.5 புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சிக்கு நேற்று வருகைதந்தார்.  விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயல், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் உள்துறை அமைச்சருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.  திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து நேரடியாக சாலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கோர்ட்டியார்ட் ஹோட்டலில் தங்கினார். அதனால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.    நேற்று  மாலை 5 மணி அளவில் புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு  நேற்றிரவு அதே ஹோட்டலில் தங்கினார்.

இன்று காலை (ஜன.5) ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மன்னார்புரம் பகுதியில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். இதனால் ஸ்ரீரங்கம் மற்றும் மன்னார்புரம் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.