துறையூர் அருகே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
திருச்சி, ஜன.7 துறையூர் அருகே வி.அ.சமுத்திரத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், 8வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வி.அ. சமுத்திரம் கிராமத்தில் இன்று கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் முசிறி கோட்ட கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் மருத்துவர் பாலாஜி முகாமிற்கு நேரில் வருகை தந்து தடுப்பூசி பணிகளை ஆய்வு செய்தார்.
வீரமச்சான்பட்டி கால்நடை உதவி மருத்துவர் சதிஷ்குமார் தலைமையில் இந்தப் பணிகள் நடைபெற்றது கால்நடை ஆய்வாளர் கமலவேணி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் யுவராஜ் ஆகியோர் கிராமத்திலுள்ள பசுக்கள் மற்றும் எருதுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகளை செலுத்தினர்.
இந்த முகாமில் நூற்றுக்கணக்கான கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கால்நடைகளைத் தாக்கும் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கோமாரி நோயிலிருந்து பாதுகாக்க, விவசாயிகள் அனைவரும் தங்களது கால்நடைகளுக்குத் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.