“வா வாத்தியார்” படக்குழுவினர் ரசிகர்களுடன் சந்திப்பு

0 132
Stalin trichy visit

திருச்சி, ஜன.17   ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்திக், சத்யராஜ், ராஜ்கிரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வா வாத்தியார் இத் திரைப்படம் 14 ஆம் தேதி வெளியானது.  இந்நிலையில் படத்தை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் படத்தின் கதாநாயகன் கார்த்திக், இயக்குனர் நலன் குமாரசாமி ஆகியோர் திருச்சி LA சினிமாவில் ரசிகர்களை சந்தித்தனர். அப்போது ரசிகர்கள் கார்த்தியை சூழ்ந்து கொண்டனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து நடிகர் கார்த்தி செய்தி அவர்களுக்கு அளித்த பேட்டியில்

புரட்சி தலைவரை திரும்பவும் திரைக்கு கொண்டு வந்துள்ளது இப்படம் குடும்பத்துடன் வந்து படம் பார்க்கின்றன திருச்சியை சார்ந்த இயக்குநர் நலன் குமாரசாமியுடன் வந்து பார்த்து மிகவும் சந்தோஷம். கைதி 2 குறித்த கேள்விக்கு அதற்க்கு லோகேஷ் பதில் சொல்வார் என்றார் மேலும் நடிகர் சங்க கட்டிடம் 2 மாதத்தில் முடிவடையும் என கூறினார்.

தொடர்ந்து “வா வாத்தியாரே” படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

கதையை குறைத்து மசாலா அதிகமாக வைத்து வித்யாசமாக இந்த படத்தை பண்ணி உள்ளோம். நாம் சிறிய வயதில் உள்ள போது அபூர்வ சகோதரர்கள் பார்த்தோம் அதேபோன்று இப்போ உள்ள சின்ன பசங்களுக்கு இந்த படத்தை எடுத்தோம் இதில் சண்டையும் அழகியலுடன் இருக்கும். சூது கவ்வும் அப்போது உள்ள வயது அப்படி எனவே அட்ராசிட்டி உடன் படம் எடுத்தோம். இப்போது பக்குவம் உள்ளது எனவே சினிமாவை பக்குவமாய் கையாள்கிறோம்.

நாங்கள் திமுக சார்பு உடையவர்கள் ஆனால் எம்ஜிஆர் ரசிகர் கிடையாது. ஆனால் கதைக்கு தமிழ்நாட்டில் MGR ஐ தான் எடுக்க முடியும். இப்போ உள்ள ஹீரோ சினிமாவை வைத்து தான் வருவார்கள் எனவே எம்ஜிஆர் தான் அதற்கு பொருத்தமானவர் எம்ஜிஆர் முழுமையான ஹீரோ அவர் தான் கதைக்கு தேவைப்பட்டார் எனவே தான் வாத்தியாரை தேர்ந்தெடுத்தோம். ஆரம்பத்தில் கதைக்கான ஐடியாவாக பார்த்தேன் ஆனால் போக போகா அவர் மீது உள்ள அபிமானம் கூடியது. எம்ஜிஆர் நல்லவர் கெட்டவர் அரசியல்வாதி என்பதைவிட சினிமாவில் அவர் காட்டிய இமேஜ் கிளாசிக்கல் இமேஜ் .

ஞானவேல் ராஜா அப்பா குடிக்காமல் இருப்பதற்கு வாத்தியார் படங்கள் தான் காரணம் என தெரிவித்தார். ஒரு நடிகர் ரசிகர்களுக்கு நல்வழி படுத்துகிறார்.  அது தான் இந்த படத்தின் கான்செப்டாக வைத்திருக்கிறேன்.  மேலும் சென்சார் முக்கியம் ஆனால் சென்சார் நன்றாக இயங்க வேண்டும்.

பராசக்தி, வா வாத்தியார் எதைச்சையான போட்டி தான் எனக்கு சுதா கொங்கரா நண்பர் இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, பொதுமக்கள் சினிமாவை கலையாக பார்க்கிறார்கள் கிளாசிக்கல் சினிமா கொடுத்தல் மக்கள் ரசிப்பார்கள் சில சமயம் சிலநேரம் மிஸ் ஆகும் சில நேரம் வொர்க் ஆகும் என்றார்

இப்போது யாரும் மேடை நடனம், இசை வாத்தியம் போன்றவற்றை நேரடியாக பார்ப்பது இல்லை சினிமா தான் உள்ளது. பலபேர் சினிமா பார்த்து கெட்டுப் போகின்றனர் என கூறுகின்றனர் குழந்தைகள் கேட்டு போகாமல் இருக்க பல்வேறு கலைகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் என்றார்

மேலும் சினிமாவை மக்கள் நுணுக்கமாக பார்த்தார்கள் என்றால் சினிமா நல்ல சினிமா வரும் எடுத்துக்காட்டு கடைசி விவசாயி வெற்றி அடைந்து இருந்தார் நன்றாக இருந்து இருக்கும் என்றார் அடுத்த படம் சூது கவ்வும் போனதும் நடிகை வைத்து என இரண்டு கதை உள்ளது எதை வேகமாக ஆரம்பிக்க முடியுமோ அதை ஆரம்பிப்பேன் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.