“லாகிராஸ்” புதிய விளையாட்டு போட்டியில் பயிற்சி பெற வீரர்- வீராங்கனைகள் தேர்வு

0 110
Stalin trichy visit

திருச்சி, ஜன.19  ஒலிம்பிக் போட்டியில் 2028 ஆம் ஆண்டு சேர்க்க உள்ள லாகிராஸ் போட்டியில் கலந்துகொண்டு பயிற்சி பெறுவதற்கு திருச்சி மாவட்ட அளவில் வீரர்- வீராங்கனைகள் தேர்வு திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் நடந்தது

உலகத்தில் பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடைமுறையில் உள்ளது சில போட்டிகள் புதிது புதிதாக உருவாக்கி வருகிறது ஆனால் அந்த விளையாட்டு போட்டிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால் அது கேள்வி குறியாக உள்ளது.

இந்த நிலையில்  லாகிராஸ் என்ற புதிய விளையாட்டு போட்டி கடந்த பனிரெண்டாவது நூற்றாண்டில் நடைமுறையில் இருந்துள்ளது அதன் பிறகு அது நடைமுறையில் இல்லாமல் போனது இந்த நிலையில் 17 ஆம் நூற்றாண்டில் மீண்டும் அது நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டியானது தற்பொழுது வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற உள்ளது. விளையாட்டு புதிது என்பதால் அதிக அளவில் வீர வீராங்கனைகள் இல்லாமல் உள்ளது. அதனால் இந்த புதிய போட்டியில் கலந்து கொண்டுபயிற்சி பெறுவதற்கு புதிதாக வீத வீராங்கனைகள் தேர்வு திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

இதில் திருச்சி மாவட்ட அளவில் பயிற்சி பெறுவதற்கு இந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றும் இவர்களுக்கு இரண்டு விதமான போட்டிகள் நடைபெறும் என்றும் 10 பேர் கொண்ட அணியாகவும் மற்றொன்று ஆறு பேர் கொண்ட அணியாகவும் செயல்படுவார்கள்பத்து பேர் கொண்ட அணியில் நான்கு பேர் மாற்று வீரர்களாக களம் இறக்கப்படுவார்கள்

ஆறு பேர் கொண்ட அணியில் ஆறு பேர் மாற்று வீரர்களாக களம் இறக்கப்படுவார்கள் இவர்களுக்கான போட்டி நேரம்மொத்தம் 45 நிமிடம் அதில் முதல் பாதியில் 20 நிமிடம் ஐந்து நிமிடம் இடைவேளை மீண்டும் இருபது நிமிடம் நடைபெறும்.

இந்த போட்டியானது காக்கி போட்டியை சார்ந்துள்ளது இந்த போட்டியில் கலந்து கொண்டு தேர்ச்சி பெரும் வீரர்கள் அவர்களுக்கு என யூரோ மற்றும் ஏசியா அளவில் நடைபெறும் போட்டிகள் கலந்து கொண்டு தேர்வானால் அவர்கள் 2028ம்ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்

இந்த போட்டியில் ஓரிரு ஆண்டுகளில் பள்ளிகளிலும் மினிஸ்ட்ரி அளவிலும் இந்த போட்டியை கொண்டு வருவார்கள் இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் நாம் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் இந்த போட்டியில் கலந்து கொண்டு வீரர்கள் அரசு வேலைக்கு செல்ல விரும்புவோருக்கு விளையாட்டு இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே இந்த போட்டியை கற்றுக்கொள்ள விருப்பமும் ஆர்வம் உள்ள வீர வீராங்கனைகள் கலந்து கொண்டு இந்த போட்டியில் பயிற்சி பெற வேண்டும் அவர்களுக்கு இந்த போட்டியின் விதிமுறைகள் போட்டி எப்படி நடைபெறும் என்பது குறித்தும் இந்தப் போட்டியின் தலைவர் மணிகண்டன் துணைத் தலைவர் யோகேஷ் அடங்கிய குழுவினர் புதிதாக இந்த போட்டியில் பங்கு பெற வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரிவாக எடுத்து கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.