நவலூர்குட்டப்பட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: 600 காளைகள் பங்கேற்பு

0 146
Stalin trichy visit

திருச்சி, ஜன.19  திருச்சி நவலூர் குட்டப்பட்டில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த 600 காளைகள் – பரிசுகளை அள்ளிய வீரர்கள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில், தைப்பொங்கலை முன்னிட்டு இன்று பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. ஆண்டுதோறும் தை மாதம் 5-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டும் அரசின் உரிய அனுமதியுடன் போட்டிகள் மிக உற்சாகமாக நடைபெற்று வருகின்றன.

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பாக மாடுபிடி வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி கொடியசைத்து போட்டியைத் துவக்கி வைத்தார்.

வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க, மாடுபிடி வீரர்கள் மிகுந்த வீரத்துடன் களத்தில் இறங்கினர்.

இப்போட்டியில் 600 காளைகள் திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

300 மாடுபிடி வீரர்கள் துடிப்புடன் காளைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும்காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் உற்சாக மூட்டும் வகையில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளுக்கு சைக்கிள், மிக்ஸி, கிரைண்டர், குக்கர் மற்றும் சீலிங் பேன், டைனிங் டேபிள், மெத்தை, கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான கிராம மக்கள் இந்த வீர விளையாட்டினை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். பாதுகாப்புப் பணிகளுக்காகக் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த போட்டியில் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா, மாமன்ற உறுப்பினர் பி.ஆர்.பி பாலசுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

Leave A Reply

Your email address will not be published.