மணப்பாறையில் கலைச்சங்கமம் – கிராமிய கலை நிகழ்ச்சிகள்

0 142
Stalin trichy visit

திருச்சி, ஜன.19  மணப்பாறையில் கலைச்சங்கமத்தில் பார்வையாளர்களை ரசிக்க வைத்த கிராமிய கலைஞர்கள். பறையாட்டம், ஒயிலாட்டம், சாமியாட்டம் என மக்களைக் கவர்ந்தனர்.

தமிழக பாரம்பரிய கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைச்சங்கமம் என்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் இன்று தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நடைபெற்றது. அதேபோல்
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பண்ணை சிங்காரவேலன் தலைமையில் நடைபெற்றது.

மணப்பாறை நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல்ராஜ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிராமிய கலைஞர்களின் பறையாட்டம், சாமியாட்டம், காளியாட்டம், கருப்பசாமி ஆட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், வள்ளி திருமணம் நாடகம், கண்ணகி நாடகம், கும்மி, கரகம் மற்றும் பல்வேறு பராம்பரிய நடனங்கள் ஆடி பார்வையாளர்களை பரவசப்படுத்ததினர். விழாவில் திறமையை வெளிப்படுத்திய கலைஞர்களை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதேபோல் கோலப்போட்டியில் வென்ற மகளிருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் திமுக மாவட்ட அவைத்தலைவர் பன்னப்பட்டி கோவிந்தராஜன், நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் சுரேஷ்பாபு மற்றும் திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.