சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி : மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

0 116
Stalin trichy visit

திருச்சி, ஜன.20 திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி – கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு

திருச்சி மாநகர காவல் துறை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி பொதுமக்களுக்கு சாலை விபத்துக்களை தடுக்கும் விதமாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்ட நீதிமன்றம், எம்.ஜி.ஆர். சிலை அருகில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இப்பேரணியை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் யாமினி கொடி அசைத்து துவக்கி வைத்தார் .

இதில் சாலை விதிகளை மதித்து சமுதாயத்திற்கு முன்னுதாரமாக நடக்க வேண்டும் வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் காவலர்களின் போக்குவரத்து செய்கைகளை கடைபிடிக்க வேண்டும் மது போதையில் வாகனம் ஓட்டி அப்பாவி உயிர்களையும் பலியாக்க கூடாது . தலைக்கவசம் முக்கியம் என விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ மாணவிகள் கையில் ஏந்தியும் பேரணியாக சென்றனர். இப்பேரணி நீதிமன்ற அருகே உள்ள எம்ஜிஆர் சிலையிலிருந்து துவங்கி கன்டோன்மென்ட் வழியாக வந்து தலைமை தபால் நிலையம் வந்தடைந்தனர் இதில் 15 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.