டாஸ்மாக் பார் ஊழியர் மீது தாக்குதல் : காவல்துறையில் புகார்

0 132
Stalin trichy visit

திருச்சி ஜன.22  திருச்சி ஜெயில் கார்னர் பென்சனர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வில்லியம்ஸ்.இவரது மகன் சூசை மரியம் பிச்சை.இவர் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார்.பணியின் போது திருச்சி சுப்பிரமணியபுரம் புது பாண்டியன் தெருவை சேர்ந்த ஜெயசீலன் என்பவர் அங்கு மது அருந்த வந்தார்.மது அருந்தி முடித்த பின் ஜெயசீலன் வாந்தி எடுத்துள்ளார்.அப்போது சப்ளையர் சூசை மரியம் பிச்சை ஜெயசீலனிடம் இங்கே வாந்தி எடுக்காதீர்கள் வெளியே சென்று வாந்தி எடுங்கள் என கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ஜெயசீலன் சப்ளையர் சூசை மரியம் பிச்சையை தகாத வார்த்தைகளால் திட்டி, கல்லால் தாக்கியுள்ளார் இதுகுறித்து சூசை மரியம் பிச்சை கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தாயுமான் ஜெயசீலன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.