சனாதன ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி : மகஇக – இந்து முன்னணியினர் இடையே மோதல்
திருச்சி, மே 26 சனாதனத்தை எதிர்த்து திருச்சியில் மக்கள் கலை இலக்கிய கழகம் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி – மத்திய பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணியினர் – மக்கள் கலை இலக்கியத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.
திருச்சியில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள வழி விடு முருகன் கோவில் முன்பு நடைபெறுவதாக இருந்தது அங்கு சனாதனத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் இந்து முன்னணி கட்சி சார்பில் அதே இடத்தில் சனாதானத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்தது.
இந்நிலையில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை அருகே வந்தபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதே இடத்திற்கு வருகை தந்த இந்து முன்னணி கட்சியினர் சனாதனத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் குச்சி காலனி மற்றும் வாட்டர் பாட்டிலால் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தடுத்து நிறுத்திய போலீசார் அனைவரையும் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து காவல்துறையினர் மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 36 பேர், இந்து முன்னணியைச் சேர்ந்த 8 பேர் என மொத்தம் 44 பேரை கைது செய்தனர்.