மாநில அளவிலான கராத்தே போட்டியில் திருவெறும்பூர் மாணவர்கள் தங்கம், வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை
திருச்சி, மே 26 மாநில அளவிலான கராத்தே போட்டியில் திருவெறும்பூர் மாணவர்கள் தங்கம், வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை
தமிழ்நாடு மாநில கராத்தே சங்கத்தின் சார்பாக, சேலம் பத்மவாணி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற, மாநில அளவிலான கராத்தே போட்டியில், ஆயிரக்கணக்கான கலந்து கொண்டனர் இதில் திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகரில் இயங்கி வரும், தமிழ் வாரியர் கராத்தே அகாடமி சார்பாக, மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் டி ஜெரின் தங்கம், பி லக்ஷனா வெண்கலம், ஜி யாழினி வெண்கலம், ஏ ப்ரணிதா வெண்கலம் பதக்கங்கள் வென்று, வரும் ஜூன் மூன்றாம் தேதி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் -இல் நடைபெற இருக்கும் இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு கராத்தே அணி சார்பாக பங்கெடுக்க உள்ளனர்.
இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை தமிழ் வாரியர் கராத்தே அகாடமியின் தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் கராத்தே ஆர். சுதாகர், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வாழ்த்துகள் தெரிவித்து பாராட்டினர்.