சாக்கடைக்குள் சடலமாக கிடந்த இளைஞர் உடல் மீட்பு
திருச்சி ஜன.22 திருச்சி அம்பிகாபுரம் பகுதியில் சாக்கடைக்குள் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு அரியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்ஜத் அலி (வயது 38). இவர் திருச்சி அரியமங்கலம் பகுதியில் தங்கியிருந்து பணியாற்றி வந்தார். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.இரண்டாவதாகவும் திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு அம்சத் அலி திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி.யிலிருந்து அம்பிகாபுரம் செல்லும் வழியில் ரைஸ் மில் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாக்கடை சுவற்றில் மோதி சாக்கடைக்குள் தலை குப்புற விழுந்தார்.இதில் தலை மூழ்கிய நிலையில் காயமடைந்த அவர் சாக்கடைக்கு உள்ளே தலை மூழ்கிய நிலையில் பிணமானார். தலை மட்டும் சாக்கடைக்குள் மூழ்கிய நிலையில் பிணம் கிடந்தது.இரவு நேரம் என்பதால் யாரும் பார்க்கவில்லை.இன்று காலையில் அக்கம் பக்கத்தில் சென்ற பொதுமக்கள் பார்த்து அரியமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற அரியமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அவரிடம் இருந்த முகவரியின் அடிப்படையில் முதல் கட்ட விசாரணையில் அவர் பெங்களூருவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்த செல்போன் எண்ணின் அடிப்படையில் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது உறவினர்கள் திருச்சிக்கு இன்று மாலைக்குள் வந்து விடுவார்கள் .அதன் பின்னர் மற்ற விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.தொடர்ந்து இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.