திருச்சி விமானநிலையத்தில் கனிமொழி எம்.பிக்கு தி.மு.க. மகளிர் அணியினர் உற்சாக வரவேற்பு
திருச்சி, ஜன.22 திருச்சி விமான நிலையம் வருகை தந்த கனிமொழி எம்.பிக்கு திமுக மகளிர் அணியினர் உற்சாக வரவேற்பு
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் திமுகவின் பிரம்மாண்டமான ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
செங்கிப்பட்டி அருகே சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டத் திடலில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர்கள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
இதனை முன்னிட்டு இன்று மாநாடு திடலை பார்வையிடுவதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வந்தடைந்த கனிமொழி MP க்கு திமுக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், மாவட்ட மகளிர் அணி தலைவி கவிதா, உள்ளிட்ட ஏராளமான மகளிர் அணியினர், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.