முசிறி தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறிதல் குறித்து சார்- ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
திருச்சி, ஜன.23 முசிறி சார் ஆட்சியர் அலுவலகத்தில் முசிறி தொகுதியில் பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறிதல் குறித்த அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சார் ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா, முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் பங்கேற்பு..
திருச்சி மாவட்டம், முசிறி சார் ஆட்சியர் அலுவலகத்தில் முசிறி தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறிதல் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சார் ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா தலைமையில் நடைபெற்றது. முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார், சமூக நல வட்டாட்சியர் வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
தேர்தல் துணை வட்டாட்சியர் சரவணன், அனைத்துக் கட்சி பிரமுகர்களிடம் சென்ற தேர்தலில் 15 வாக்குசாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது, பதற்றமான வாக்குச்சாவடிகளில் நமது போலீசார் தவிர சி.ஆர்.பி.எப் மற்றும் பல்வேறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.
இவை தவிர வேறு ஏதேனும் வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழல் உள்ளதா என தெரிந்து முன்கூட்டியே தெரிவித்தால் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என டிஎஸ்பி சுரேஷ்குமார் தெரிவித்தார். முசிறி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நான்கு வாக்குச்சாவடிகள் அமைய உள்ள நிலையில் கூடுதல் கண்காணிப்பு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த தகவலை மாவட்ட ஆட்சியருக்கு அறிவித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சார் ஆட்சியர் தெரிவித்தார், கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் அங்கீகார கட்சியினர் கலந்து கொண்டனர்