திருச்சி காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் பொறுப்பேற்பு

0 138
Stalin trichy visit

திருச்சி, ஜன.23  தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இதில் திருச்சி மாவட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவராக  ரெக்ஸ் ஏற்கனவே பதவி வகித்த நிலையில் அதே பதவியில் மீண்டும் வகிப்பதாக தலைமை அறிவித்தது அதனை தொடர்ந்து திருச்சி மாநகர் மாவட்ட வடக்கு காங்கிரஸ் தலைவராக சரவணன் மற்றும் தெற்கு மாவட்ட தலைவராக ராஜலிங்கம் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே  அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் புதிய நிர்வாகிகள் பதவியேற்று வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக தொட்டியம் EM சரவணன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் உடன் இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.