தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு
திருச்சி, ஜன.23 தேசிய வாக்காளர் தினத்தை (ஜன.25) முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தில் அறிவுறுத்தலின்படி தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்பு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்திரா கணேசன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தலைமையில் தேர்தல் ஆணையத்தின் இலச்சினை வடிவில் நின்றி மாணவ,மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ந.சீனிவாசன், வட்டாட்சியர்கள் செல்வகணேஷ், (ஸ்ரீரங்கம்), சக்திவேல் முருகன் (தேர்தல்), கல்லூரி செயலர் ராஜசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.