ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர் வீரவசனம் பேசுகிறார் : விஜய் மீது அமைச்சர் கே.என்.நேரு தாக்கு

0 168
Stalin trichy visit

திருச்சி, ஜன.26 ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர் வீரவசனம் பேசுகிறார் : விஜய் மீது அமைச்சர் கே.என்.நேரு தாக்கு

திருச்சி மாநகர் தென்னூர் பகுதியில் உள்ள மொழிப்போர் தியாகி நினைவிடத்தில் திமுக சார்பாக அமைச்சர் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மலர்வளையும் வைத்து மரியாதை செலுத்தினர். முன்னதாக திருச்சி கோகினூர் சிக்னலில் இருந்து தென்னூர் வரை கருப்பு பட்டை அணிந்து பேரணியாக சென்றனர்.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு கூறியது…

மொழிக்காக பாடுபட்டு தனது இன்னுயிரை நீர்த்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துதல் மூலமாக இன்று கால தலைமுறையினருக்கு அவர்களின் தியாகத்தை உணர்த்து விதமாக அமையும் என்பதை தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி வருகிறோம். நேற்றைய முன் தினம் என்னிடம் ஒருவர் பேசினார். நமது மாநிலத்தைப் போலவே ராஜஸ்தானும் ஒரு பெரிய மாநிலம் அங்கு 80 சதவீதம் பேர்கள் முன்பு ராஜஸ்தான் மொழியை பேசி வந்தனர். ஆனால் தற்போது 20% பேர் மட்டுமே ராஜஸ்தான் தாய் மொழியை பேசுகிறார்கள் மீதம் உள்ளவர்கள் ஹிந்தி மொழியை பேசி வருகிறார்கள் என்றார்.  ஆகையால் படிப்படியாக உள்ளே நுழைகிறார்கள் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தேர்தல் ஆணையமாக இருந்தாலும் சரி இந்தியை பேச்சு மொழியாக செயல்படுத்துவதில் தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள். இவற்றை நாம் ஒருவர் தான் எதிர்த்து நிற்கிறோம் குறிப்பாக தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உறுதியாக செயல்பட்டு வருகிறார்கள்.

நடிகர் ஒருவர் கட்சியை ஆரம்பித்திருக்கிறார் அவர் இன்று பொதுக்குழு மற்றும் செயல்வீரர் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.. நானா பயப்படுவேன் ஒருபோதும் அழுத்தத்திற்கு பயப்பட மாட்டேன் என்று வீர வசனம் பேசி இருக்கிறார். தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றார். தனது படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட போது நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை ஆகியோர் ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றனர் அதன் காரணம் அவர்கள் கொடுத்த அழுத்தம் அவ்வாறு செயல்பட்டு விட்டு தற்போது வீர வசனம் பேசி வருகிறார்.

அதேபோல அதிமுக எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி அவர்கள் அழைத்து வந்து மேடையில் பேசும்போது NDA கூட்டணி என்று குறிப்பிட்டு பேசினாரே தவிர அதிமுக, பாஜக கூட்டணி என்று அவர் பேசவில்லை, இந்த சூழ்நிலையில் நாங்கள்தான் அடுத்தது ஆட்சி அமைக்க போகிறோம் நான் தான் அடுத்த முதலமைச்சர் என்று கூறி வருகிறார். அவரது கூட்டணி பொருந்தா கூட்டணி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே… இதில் பாய் பாய் ஸ்டாலின் என்று கூறுகிறார்கள் தமிழ்நாட்டு பொருத்தவரை வெல்கம் ஸ்டாலின் என்றே அவர் இருப்பார்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் தனித்தனியாக நின்றாலும் மும்முனை கூட்டணி வைத்து நின்றாலும் திமுக தான் தேர்தலில் வெற்றி பெறும் இது வரலாறு வருகின்ற தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் முதல்வராக ஸ்டாலின் அவர்கள் அமர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டங்களுக்கு தலையை ஆட்டியததால் இன்று மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை வருகின்ற தேர்தலில் மீண்டும் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் அதில் எந்த சந்தேகமும் இல்லை, கடந்த தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில தொகுதியில் வேட்பாளர்கள் சரியாக வாக்கு கேட்காததால் நாங்கள் தோல்வியை சந்தித்துள்ளோம் ஆனால் இம்முறை டெல்டா மாவட்டம் முழுவதும் திராவிட முன்னேற்ற கழகம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

தமிழ்நாட்ட பொறுத்தவரை பல்வேறு துயர சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பாக கரூர் மாவட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நடந்துள்ளது சிலர் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்று வருகிறார்கள் அங்கு அவரிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டது என்பது முழுமையாக தெரியவில்லை, அதேபோன்று திமுகவை சேர்ந்தவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள் எதுவாக இருந்தாலும் தளபதி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் என்ன கட்டளை இடுகிறாரோ அதை பின்பற்றி நாங்கள் செயலாற்றுவோம்.

டெல்டா மாவட்டம் முழுவதும் வருகின்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தான் முதல் கட்டமாக டெல்டா மாவட்டத்தில் மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது அதைத் தொடர்ந்து ஒவ்வொரு பொதுக்கூட்டமும் மாநாடும் நடைபெறும் நிச்சயம் வருகின்ற தேர்தலில் டெல்டா மாவட்டம் முழுவதும் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றியை பெரும்.

யாரும் யாரையும் வீழ்த்தவும் அளிக்கவும் முடியாது அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் வருகின்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்காக உறுதுணையாக இருப்போம் என மொழிப்போர் தியாகி வீரவணக்க நாளில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.