மணப்பாறையில் குடியரசு தின விழாவை கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்

0 214
Stalin trichy visit

திருச்சி, ஜன.26 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் 77 குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட தலைவர்‌ ராஜலிங்கம் தலைமையில் பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து திருச்சி சாலை மற்றும் காந்தி நகரில் உள்ள காந்தி சிலைகளுக்கும் கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதைத்தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் பொதுமக்கள், கடை வியாபாரிகள் மற்றும் பாதசாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். விழாவில் நகர தலைவர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.