கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு
திருச்சி, ஜன.29 திருச்சி ராம்ஜி நகர் அருகே கஞ்சா விற்ற வழக்கில் திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசாரால் கைதானவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது
திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் ராம்ஜி நகர் பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை கடந்த மாதம் 22ஆம் தேதி பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது
அதன் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரணை செய்த பொழுது அவர் ராம்ஜி நகர் காட்டூர் மதன் (எ)சக்தி (34) என்ற இவர் ஒடிச மாநிலம் ராய கடபாவில் இருந்து விற்பதற்காக கஞ்சாவை வாங்கி வைத்திருந்தப்போது
மதுவிலக்கு பிரிவு போலீசார் அவரை கைது செய்துதிருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் சத்யாவிடம் இருந்து 4கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ 40 ஆயிரம் ஆகும்.
இந்த நிலையில் திருச்சி எஸ் பி செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் திருச்சி கலெக்டர் சரவணன் சக்தி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் சிறையில் உள்ள சக்தியிடம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து சமன் வழங்கப்பட்டது திருச்சி மாவட்டத்தில் இதுவரை இந்த ஆண்டில் மூன்று பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.