நேரடி நெல் கொள்முதல் நிலையம்: அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்
திருச்சி, ஜன.29 திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் குண்டூர், திருவளர்ச்சி பட்டி, ஐயம்பட்டி ,அயன்புத்தூர், ஆகிய கிராமங்களை அடக்கிய ஊராட்சியாக உள்ளது .மேலும் இந்த ஊராட்சியில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது
இந்நிலையில் இந்த ஊராட்சியில் சுமார் 350 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் தற்பொழுது விவசாயம் செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஒன்று அமைத்த தர வேண்டுமென திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்திருந்தனர்
மேலும் இந்த கோரிக்கையை ஏற்று இன்று காலை திருவளர்ச்சிபட்டி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்ததுடன் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்
மேலும் இந்நிகழ்வில் நேரடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் ஆனந்தி, பருவகால உதவுபவர் ஆனந்தகுமார் மற்றும் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், மாரியப்பன் பாலமுருகன், ரெங்கர் உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் விவசாயிகள் என ஏ
ராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.