தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் மணப்பாறை மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்து அசத்தல்

0 92
Stalin trichy visit

திருச்சி, பிப்.2 தேசிய அளவிலான சிலம்பபோட்டியில் மணப்பாறை மாணவ – மாணவிகள் முதலிடம் பிடித்து அசத்தல் –  16 தங்கப்பதக்கம், தலா 3 வெள்ளி, வெண்கலப்பதங்கம் வென்றனர்.

பாண்டிச்சேரியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் திருச்சி மாவட்டம், மணப்பாறை வீரப்பன் சிலம்பாட்ட கழகத்தைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள் 16 தங்கப்பதக்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.

இதையடுத்து முதலிடம் பிடித்து வெற்றியோடு திரும்பிய மாணவ – மாணவிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மணப்பாறை பேருந்து நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெற்றோர்கள் மற்றும் பல்வேறு மாணவ – மாணவிகள் வெற்றி பெற்று திரும்பிய சிலம்பாட்ட குழுவினருக்கு சால்வை அணிவித்தும், மாலைகள் அணிவித்தும் வரவேற்று மகிழ்ச்சியோடு அழைத்துச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.