பேரறிஞர் அண்ணா நினைவு நாள் : தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை

0 116
Stalin trichy visit

திருச்சி, பிப்.3  பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினத்தை முன்னிட்டு தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் மாநகர செயலாளர் டி வி கணேஷ் தலைமையில் தேமுதிகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ‌

இந்நிகழ்ச்சியில் மாநில நெசவாளரணி துணை செயலாளர் ஜெயராமன், மாற்றுத்திறனாளிகள் அணி துணை செயலாளர் குமாரவேல், பொருளாளர் சாகுல் ஹமீது, துணை செயலாளர்கள் பிரீத்தா விஜய் ஆனந்த், முத்துக்குமார், ராஜ்குமார், மாவட்ட நிர்வாகிகள் ராமு, பாண்டியன், பகுதி செயலாளர்கள் கார்த்திகேயன், மோகன், மணிகண்டன், கேப்டன் மன்றம் கோபி, இளைஞர் அணி ராஜா, மகளிர் அணி நிஷா, பிரியா மற்றும் நிர்வாகிகள் சிவா, பார்த்தசாரதி, ஆபிரகாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.