ஒன்றிய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்

0 145
Stalin trichy visit

திருச்சி, பிப். 12  தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கும் தொழிலாளர் சட்ட தொகுப்பை உறுப்பினர்களை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே பல்வேறு தொழிற்சங்கங்கள் விவசாயிகள் இடதுசாரிகள் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மாவட்ட தலைவர் நெல்சன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டம் பெரியார் சிலையில் இருந்து பேரணியாக சென்று ரயில் நிலையம் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஊதிய தொகுப்பு சட்டம் 4 தொகுக்கப்பட்டுள்ளன. தொழிலாளி என்ற அடையாளம் அளிக்கப்படுவது சங்கம் கோரும் உரிமை மறுக்கப்படுவது தொழிற்சங்க அங்கீகாரம் கேள்விக்குள்ளாக்குவது மேலும் வேலைநிறுத்த சட்டவிரோதம் மீறினால் அபராதம் கைது மேலும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு எட்டு நாள் சம்பள பிடித்தம் பிஎஃப் பிடித்தம் 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட சட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்

போலீசார் அவர்களை தடுக்கவே போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது பின்னர் காவல் துறையினரின் தடுப்பு வேலியை மீறி ரயில் நிலையத்துக்குள் நுழைந்து ஒண்ணாவது நடைமேடையில் உள்ள ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட அனைத்து தொழிற்சங்கத்தினரும் கைது செய்யப்பட்டனர்

Leave A Reply

Your email address will not be published.