முசிறியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

0 79
Stalin trichy visit

திருச்சி, பிப்.12 முசிறியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது, எம் எல் ஏ காடுவெட்டி தியாகராஜன் சீர்வரிசை பொருட்கள் வழங்கி வாழ்த்தினார்.

திருச்சி மாவட்டம், முசிறி தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முசிறி வட்டாரம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் (ஐசிடிஎஸ்) சார்பாக முசிறி சுற்று வட்டார பகுதிகளிலுள்ள 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது, விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் மற்றும் மாலை அணிவித்து ஏழு வகையான உணவுகள் வழங்கி நெற்றியில் பொட்டு வைத்து வளைகாப்பு சீர்வரிசை பொருட்கள் வழங்கி
வளைகாப்பு விழாவை கொண்டாடினர், கர்ப்பிணி பெண்களுக்கு முசிறி
தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு மலர், மஞ்சள் அரிசி தூவி
வாழ்த்தினார், தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கு அதிக அளவு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாகவும் கூறி புகழாரம் சூடி பேசினார்,

தொடர்ந்து கர்ப்பணி பெண்கள் அனைவரும் ஏழு வகையான உணவருந்தி சென்றனர், 100 கர்ப்பிணி பெண்கள் ஒரே இடத்தில் வளைகாப்பு விழா நடைபெற்றது அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.