சட்டமன்ற தேர்தலில் நானும் போட்டியிடுவேன் : சீமான் பேட்டி
திருச்சி, பிப். 18 திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆலம்பட்டி புதூர் பகுதியில் வருகின்ற 21ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கும் மாநாட்டின் திடலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசுகையில்..
வரும் சட்டமன்ற தேர்தலில் நானும் போட்டியிடுவேன். படையை வழி நடத்தி செல்பவர்களும் களத்தில் தான் இருக்க வேண்டும். எந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்பது குறித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்தும் எந்த எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்பது குறித்தும் 21 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்.
மற்ற கட்சிகள் மாநாடு போன்று எங்கள் மாநாடு இருக்காது எங்கள் மாநாட்டில் தேர்தல் அறிக்கை என்பது கிடையாது…
எங்கள் ஆட்சி எப்படி இருக்கக் போகிறது என்பதற்கான மாநாடாக தான் இருக்கப் போகிறது..மாற்றத்தை விரும்பும் மாநாடாக இருக்கப்போகிறது… வணங்குவதற்கு ஆயிரம் கடவுள் இருக்கிறார்கள் வாழ்வதற்கு இந்த ஒரு பூமி உள்ளது இந்த பூமியை காக்க போவது யார் என்பதை உணர்த்துவதற்கான மாநாடு இருக்கப்போகிறது..
அன்றைய தினம் 234 தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளேன்.. அன்றைய தினம் நான் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள போகிறீர்கள். அன்று முதல் எங்கள் தேர்தல் பயணத்தை தொடங்க போகிறோம்..
தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி இருக்கும்போது ஒரே நாளில் 6500 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமை தொகை மற்றும் கூடுதலாக கோடைகால தொகை கொடுத்தது மிக பெரிய கொடுமையாக பார்க்கிறேன். மகளிர் உரிமைத் தொகையை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.. தமிழகத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி வரப்போகிறது.
மக்கள் சந்திப்பு பயணத்தை தற்போது நிர்வாகிகள் சந்திப்பு பயணம் என்று விஜய் மாற்றி உள்ளார் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
தம்பியை குறை சொல்வது என் வேலையில்லை என்னுடைய வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன் அதை நீங்கள் என் தம்பியிடம் தான் கேட்க வேண்டும்..
இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறோம் வலுவாக இருக்கிறோம் என கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு பிரச்சனை இந்தியா கூட்டணியில் இருப்பதால்தான் இதுபோன்று அவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்…
இந்தியா கூட்டணியிலேயே திமுக மட்டுமே வலுவாக இருக்கிறது அவர் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டால் இந்தியா கூட்டணி என்று பெயரில் மட்டும்தான் இருக்கும் அந்த கூட்டணி இருக்காது…