தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: மதமோதலை ஏற்படுத்த முயன்ற பா.ஜ.க.வின் முயற்சி அம்பலம் – திருமாவளவன் பேட்டி

0 119
Stalin trichy visit

திருச்சி, பிப். 18 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்குபெற செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார்.

விமான நிலையத்தில் மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், சக்திஆற்றலரசு,
வழக்கறிஞர் கலைச்செல்வன். கனியமுதன், திலீபன்ரமேஷ், வழக்கறிஞர் ரமேஷ், சங்கர், முன்னாள் மண்டல செயலாளர் தமிழாதன், பெரம்பலூர் நாடாளுமன்ற செயலாளர் கிட்டு,
மண்டல செயலாளர் பிரபாகரன். துணை மண்டல செயலாளர் அரசு,
உட்பட மாநில, மாவட்ட, நகர ஒன்றிய நிர்வாகிகள் பொன்னாடை  அணிவித்து  வரவேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன்

தஞ்சாவூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் மதமாற்றம் காரணம் என பாஜகவினர் வதந்தியை பரப்பி தமிழ்நாட்டில் பதட்டத்தை உண்டாக்க முயற்சித்தார்கள். ஆனால் அந்த மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை என சிபிஐ உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கை மதவாதிகளுக்கு பாடத்தை புகட்டி உள்ளது.

திருச்சி தஞ்சை சாலையில் துவாக்குடியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கட்சி சார்பற்ற அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதற்கென்று ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றமும் அந்த சாலையில் இருபுறமும்.சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என கூறி உள்ளது. ஆனாலும் பணி கிடப்பில் உள்ளது.  இது அமைப்பிற்கு ஏமாற்றத்தை தருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர். தமிழக அரசு சர்வீஸ் சாலை அமைப்பதற்கு இடத்தை கையகப்படுத்தி தரவேண்டும் என்பது உயர் நீதிமன்றத்தின் ஆணை அதன் அடிப்படையில் தமிழக அரசு இந்திய ஒன்றிய அரசும் சர்வீஸ் சாலை அமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேர்தலுக்காக நடத்தப்படுகிறது என போராட்டம் என சுருக்கி பார்க்க தேவையில்லை
உள்நோக்கம் எதுவுமில்லை.

திமுக கூட்டணிகள் காங்கிரஸ் கூட்டணியில் தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. காங்கிரஸ் திமுகவில் உள்ளது எந்த குழப்பம் இல்லை என கருத்தை அழுத்தமாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது.

மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான கோரிக்கை அல்ல ஒட்டுமொத்தமாக மக்களின் கோரிக்கை இந்தியா முழுவதும் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது புள்ளி விவரங்கள் இந்த உண்மையை தெரிவிக்கின்றது.

தமிழகத்தில் மதுக்கடைகளை அடுத்தடுத்து படிப்படியாக குறைத்து மூட வேண்டும் என்ற கோரிக்கை மாநாட்டிலே வலியுறுத்தி வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உள்ளோம்.
அது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை அளிக்கிறது மறுபடியும் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த கோரிக்கையை நினைவூட்டுகிறேன்.

இளைய தலைமுறை பாதுகாக்க வேண்டும் தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டும். எனவே மது மற்றும் போதை பொருள் கட்டுப்படுத்துவதற்கு முற்றராக ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முன்வர வேண்டும்.

மகளிர் சுய உதவி குழுவிற்கு 1.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொடுத்த தொகை செலுத்தாத மாநிலமாக தமிழகம் உள்ளது என்ற கேள்விக்கு

தமிழக அரசு ஏன் திரும்பத் திருப்பி கொடுக்கிறார்கள் என்று கேட்கிறார்கள் இது குறித்து அரசு கவலைப்பட வேண்டும். இது நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரம்  கோடி நிதி கொடுத்து இந்த தள்ளுபடி செய்துள்ளது. அது அவற்றை வாங்கி விட்டு வெளியேறி இருக்கிறார்கள். அதைப் பற்றி இந்த நாடு கவலைப்படவில்லை. கூட்டணி உருவாக்குவதில் பாதுகாப்பதிலும் அக்கறையோடு இருக்கிறோம் கேள்விக்கு இடம் இல்லை.

காங்கிரஸ் அதிகம் கேட்பது பேச்சுவார்த்தையில் முடிவாகும் கேட்பதால் கூட்டணி உடையாது.
உழைக்கிறோம், அதிகாரத்தை பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது.
தமிழக அரசியலுக்கு அது பொருந்தாது என முதல்வர் தெரிவித்திருக்கிறார். எப்படி பொருந்தி வராது என்பதை விளக்குவார்.

எங்களைப் போல காங்கிரஸ் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று கிடையாது.
நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களது கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வைப்போம். இந்த கூட்டணி உருவாக்குவதில் எங்கள் பங்கு இருக்கிறது.

இந்த இடத்தில் இடம் கிடைக்கும் என வெளியிட வேண்டி அவசியமில்லை
திமுக கூட்டணி பிரச்சனை இல்லை என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.