பூவாளூரில் RAWE திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்கக் கூட்டம்
திருச்சி, பிப். 19 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் பேரூராட்சியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் RAWE திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் லால்குடி பகுதியில் தங்கி பல்வேறு களப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.அதன்ஒரு பகுதியாக பூவாளூரில் இன்று விவசாயிகளுக்கு பயனுள்ள தொழில்நுட்ப விளக்கக் கூட்டத்தை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் இலை வண்ண அட்டை (Leaf Colour Chart), மஞ்சள் நிற ஒட்டும் பொறி (Yellow Sticky Trap) போன்றவை குறித்து நேரடி கள விளக்கம் வழங்கப்பட்டது. இலை நிற அட்டையின் மூலம் நெற்பயிரில் நைட்ரஜன் உர தேவையை சரியாக கணிக்கலாம் என்பதையும், மஞ்சள் நிற ஒட்டும் பொறி மூலம் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என்பதையும், விவசாயிகளுக்கு மாணவர்கள் எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சி மூலம் விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து, தங்கள் விளைச்சலை உயர்த்துவதற்கான வழிமுறைகளை புரிந்துகொண்டனர்.