திருஈங்கோய்மலை கார்த்திகை தீப விழாவில் “ஓசோன்” படலம் குறித்து மாணவிகள் விழிப்புணர்வு பரதநாட்டியம்

0 14
Stalin trichy visit

திருச்சி, நவ.25 தொட்டியம் அருகே காற்று மாசு படுவதை தவிர்க்கவும், ஓசோன் படலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பரதநாட்டியம் ஆடியவாறு 4 கி.மீ கிரிவலம் சுற்றி வந்த மாணவிகள் – குப்பைகளை எரிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள திருஈங்கோய்மலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முசிறியைச் சேர்ந்த மாணவிகள் பரதநாட்டியம் ஆடியவாறே 4 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் வந்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

முசிறி நிதிலாலையா நாட்டியப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள், நடன ஆசிரியை வள்ளிக்கண்ணு பொன்ராஜ் ஆலோசனையின் பேரில் இந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக, மலை அடிவாரத்தில் அமைந்துள்ள போகர் சித்தர் சன்னதியில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, திருஈங்கோய்மலை படிக்கட்டுகளில் தீபம் ஏற்றி, மரகதாம்பிகை உடனமர் மரகதாசலேஸ்வரர் சுவாமியை மாணவிகள் தரிசனம் செய்தனர்.

இதையடுத்து, காற்று மாசுபாட்டைத் தவிர்த்தல், குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், தொழிற்சாலை நச்சுப் புகை, பருவநிலை மாற்றம்,வீடுகளின் குட்டைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும் மற்றும் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாணவிகள் பரதநாட்டியம் ஆடியபடியே மலையைச் சுற்றி 4 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் வந்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முசிறி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் விக்னேஷ், மாணவிகளின் சமூக அக்கறையையும் கலையார்வத்தையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டியப் பள்ளி ஆசிரியை வள்ளிக்கண்ணு பொன்ராஜ் தலைமையிலான குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் மாணவிகளை பெற்றோர்கள் சிவனடியார்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.