முசிறியில் 2.12 லட்சம் வாக்காளர்கள்: பட்டியல் வெளியீடு

0 216
Stalin trichy visit

திருச்சி, பிப்.23 திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்றத் தொகுதிக்கான புதிய வரைவு வாக்காளர் பட்டியலை சார் ஆட்சியர் இன்று வெளியிட்டார்.  இதில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

திருச்சி மாவட்டம், 145-வது தொகுதியான முசிறி சட்டமன்றத் தொகுதியில்,
2026 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு புதிய வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதனை இன்று முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்தப் பட்டியலை அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண் வாக்காளர்கள்1,03,63, பெண் வாக்காளர்கள் 1,08,965 , இதர
வாக்காளர்கள் 16, மொத்த வாக்காளர்கள் 2,12,612 ஆவர்.

இந்த வரைவு பட்டியலின்படி, முசிறி தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகளவில் உள்ளனர். இந்த நிகழ்வில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் இந்தப் பட்டியலைச் சரிபார்த்து, பெயர் சேர்த்தல் அல்லது நீக்கம் தொடர்பான கோரிக்கைகளை உரிய முறையில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.